கடந்த வருடம் நடாத்தப்பட்ட மென்பந்துச் சுற்றுப்போட்டியின் போது எமது கழக மற்றும் சில வீரர்களான தீபன்,மயூரன்,அஸார்,விசி,ஒதி,தரன்(இடமிருந்து வலமாக). கடந்த வருட போட்டிக்கு இவர்களது பங்களிப்பு மிக மிக முக்கியமானது

இ.இ.வி.க

இணுவில் இந்துவின் சிறுவர் அணி உறுப்பினர்களை காணலாம். இச் சிறுவர் பட்டாளம் பல வெற்றிகளை இந்துவுக்காக தேடித்தந்துகொண்டிருக்கிறது. கடந்த வருடத்தில் நடாத்தப்பட்ட பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான சுற்றுப்போட்டியில் வெற்றியை தேடித்தந்த எமது கழக வீரர்களையே படத்தில் காணலாம்.







இ.இ.வி.க.



Hi dear frinds

This is your's S.Ketha.

I really happy when i heart that you won the 'KALAJOTHI CUP' and you want to improve your talent and i wish you that you will win so many matches in the future. I wish and pray for you want to get all the victim and success in the world. "That very possible to us." -Ketha.


அரசன் அண்ணா-ராஜி அக்கா இருவரதும் திருமண நிகழ்வின் போட்டோக்கள் எமது உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கூடிய சீக்கிரம் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


இ.இ.வி.க.

கொழும்பில் நடாத்தப்பட்ட மென்பந்துச் சுற்றுப் போட்டியின் சில காட்சிகளின் பதிவுகள்.. இந்தக் காட்சித்தொகுப்பானது எமது கழகத்தைச் சேர்ந்த சத்தியனாதனால் (கண்ணன்)உருவாக்கப்பட்டுள்ளது..

ஆக்கம்: தி.சத்தியநாதன்.

வணக்கம் அன்பு நண்பர்களே,
உங்களை இந்த இணையத்தளம் முலம் சந்திப்பதில் பெரும் சந்தோசமடைகின்றேன்.

உங்கள் கேதனன்...

World Cup-1996(Srilanka Vs Australia)

cREATED bY:kANNAN(sATHIYANATHAN).

கடந்த ஞாயிற்றுக் கிழமை(கார்த்திகை இரண்டாந் திகதி) கலாஜோதி விளையாட்டுக் கழக மைதானத்தில் தலா எட்டு பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட மென்பந்துச்சுற்றுப்போட்டி ஒன்றை கலாஜோதி விளையாட்டுக் கழகம் நடாத்தியது.இறுதி ஆட்டத்துக்கு தெரிவான இணுவில் இந்து விளையாட்டுக் கழகம் மற்றும் இளம்சிங்கம் விளையாட்டுக் கழகங்கள் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய இளம்சிங்கம் அணி நிர்ணயித்த எட்டு பந்துப் பரிமாற்றங்களில் முப்பத்தி எட்டு ஓட்டங்களை எடுத்தது.முப்பத்தி ஒன்பது ஓட்டங்கள் எடுத்தால்வெற்றி என்ற இலகு இலக்குடன் களமிறங்கிய இணுவில் இந்து அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து ஆறு பந்துப்பரிமாற்றத்தில் வெகு இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.இவ்வெற்றிக்கு எமது கழக வீரரான தமிழரசனுடைய பங்களிப்பே மிக முக்கியமானது.அவர் தனது முதலாவது பந்துப்பரிமாற்றத்தின் போது எதிரணியின் மூன்று விக்கட்டுக்களை பதம் பார்த்ததோடு மட்டும் இல்லாமல், ஆட்டமிழக்காது கடைசிவரை துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.

;;